top of page
Writer's picturepuduvaieteacher

முப்பருவ பாட முறை, 9ம் வகுப்புக்கு ரத்து

மாநில பாட திட்டத்தில், 9ம் வகுப்புக்கான, முப்பருவத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது.

வரும், கல்வி ஆண்டு முதல், இறுதி தேர்வு முறை அமலுக்கு வருகிறது.தமிழகத்தில், மாநில பாடத் திட்டத்தில், 2011 முதல், சமச்சீர் கல்வி முறை அமலில் உள்ளது. மத்திய, மாநில அரசுகளின், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, முப்பருவப் பாட முறை மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது.

இந்த முறையில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலும், மூன்று வகை பருவத் தேர்வுகள் நடக்கும். முதல் பருவத் தேர்வுக்கு, ஒரு புத்தகம்; இரண்டாம் வகுப்புக்கு வேறு; மூன்றாம் வகுப்புக்கு, மற்றொரு புத்தகம் என, தனி தனியாக வழங்கப்படும்.ஒவ்வொரு பருவத் தேர்வு முடிந்ததும், அடுத்த பருவத்துக்கு, புதிய புத்தகம் தரப்படும்.

பழைய பருவ புத்தகத்தை, மாணவர்கள் படிக்க வேண்டியதில்லை. அதனால், மாணவர்களுக்கு படிப்பு சுமை குறைந்தது.இந்நிலையில், ஒன்பதாம் வகுப்புக்கான முப்பருவ பாட முறையை ரத்து செய்து, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்பதாம் வகுப்புக்கு, ஒரே புத்தகம் மட்டும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், முப்பருவ தேர்வுக்கு பதில், ஆண்டு இறுதியில் நடத்தக்கூடிய, ஒரே தேர்வு முறையும் அறிமுகமாகிறது.

இந்த புதிய மாற்றம், ஜூன், 10ம் தேதி, பள்ளிகள் திறப்பு முதல் அமலுக்கு வருகிறது. அதேபோல், ஒன்பதாம் வகுப்புக்கு, இனி ஆண்டு முழுமைக்கும் சேர்த்து, ஒவ்வொரு பாடத்துக்கும், ஒரே புத்தகமே வழங்கப்படும்.

காலாண்டு, அரையாண்டு மற்றும் ஆண்டு இறுதி தேர்வு என, நடத்தப்படும்


9TH STD NEW SYLLABUS FULL TEXT BOOK -2019

9 ENGLISH full book pdf 2019.pdf COMING SOON

81 views0 comments

Recent Posts

See All

Comments


bottom of page